பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கொடுத்த ஆண்டு என கி. மு. 776ஆம் ஆண்டையே அவர்கள் குறித்துக் காட்டுகின்றனர். அந்த ஆண்டு, முதன் முதலாக நடந்த ஒட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் எனும் புகழைப் பெற்றிருப்பவன், அதிலும் முதன் முதல் ஒலிம்பிக் வெற்றி வீரன் எனும் அழியாப் புகழைப் பெற்றிருக்கும் வீரன் கரோபஸ் என்பவன். சமையற் தொழில் செய்து தன் வாழ்க் கையை நடத்தியவன், எத்தனை சாதுர்யமும், சாமர்த் தியமும், சக்தியும் நிறைந்தவனுக வாழ்ந்திருக்கிருன் பார்த்தீர்களா!

இவ்வளவையும் ஏ ன் முன்னுரையாக உங்களுக்கு எழுதிக் கொண்டு வருகிறேன் என்ருல், புத்தகத்தின் தலைப்பு விளையாட்டு உலகில் வீரக் கதைகள் என்ப தாகும்.

வரப் போகின்ற வீரக் கதைகளில் பல, புராணக் கதைகள் போல வருணிக்கப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது, இவைகளெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா இல்லையா என்று நீங்கள் சந்தே கத்தில் சலனம் அடையக்கூடாது என்பதற்காகத்தான்.

ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்கத்தில் நடை பெற்றன என்பது உண்மை என்று, எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்ருர்கள். அப்படி யென்ருல், இப்படி நம்ப முடியாத பலகதைகள் எப்படி உருவாயின என்ருல், இது உண்மையிலே நடந்தனவா அல்லது வரலாற்ருசிரியர்களின் வ ள ம ா ர் ந் த கற்பனையா என்பதை நாமே ஊகித்து உணர்ந்து கொள்ள வேண் யது தான். வேறு வழியில்லை.

வீரக் கதைகளின் கதாநாயகர்களாக விளங்குப வர்கள் எல்லோரும், பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே