பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



அத்தகைய ஆற்றல் மிக்க வீரர்களை ஆதரித்து, ஆளாக்கி அனுப்பி வைத்து, அரும்பெரும் வெற்றிகளை ஈட்டிய இந்த கிராட்டன் நகர்த்திலேதான் வீரன் மிலோவும் தோன்றிஞன். ஏற்கனவே புகழ் பெற்ற கிராட்டன் நகரத்தவன் மிலோ என்ற புகழைப் பெரு மல், மிலோ பிறந்த பூமி கிராட்டன் என்று புகழப்படும் அளவுக்கு பராக்கிரமம் மிக்கவகைத் திகழ்ந்தான்.

நான் காண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடக்கும். அதற்கிடையே ஆங்காங்கே பிதியன் பந்தயங்கள் (Pythian Games; இஸ்த்மியான் பந்தயங்கள் (isthmian Games) நிமியன் பந்தயங்கள் (Nemean Games) என்கின்ற பெயர்களிலும் சிறப்புற பந்தயங்கள் நடந்து வரும்.

மிலோ மல்யுத்தத்தில் கெட்டிக்காரன். அவன் பையன்களுக்காக (Boys) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில்தான் முதன் முதல் பங்கு பெற்ருன். வெற்றி பெற்ருன். அந்த ஆண்டு கி. மு. 540. அதன் பின், மனிதர்களுக்கான (Men) மல்யுத்தப்போட்டியில் 5 ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிருன். அதாவது 20 ஆண்டுகள் தொடர்ந்தாற்போல் (கி. மு. 540லிருந்து கி. மு. 520 வரை) அவனே வெற்றி பெற்றி ருக்கிருன், அவனை வெல்ல யாருமே இல்லை என்ற வல்லமை மிக்க வீரனுகவே விளங்கி இருக்கிருன்.

இதற்கிடையிலே நடைபெற்ற பிதியன் பந்தயங் களில் 6 முறையும், இஸ்த்மியான் பந்தயங்களில் 10 முறையும், நிமியன் பந்தயங்களில் 9 முறையும், வெற்றி பெற்று சிறந்த வீரனகவே விளங்கியிருக் கிருன் மிலோ.