பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19.


இவ்வாறு 6 முறை ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரன் மிலோ, ஏழாவது தடவை ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து, கொண்டபோது டிமாஸ்தியஸ் என்ற ஒரு வீரனிடம் தோற்றுப்போனுன்.

ஒரு மனிதன் குறைந்தது ஏழு அல்லது எட்டு ஆண்டுகள்தான் தன் உடலில் ஆற்றலில், குறையாமல் வைத் திருந்து திறம்பட செயல்பட முடியும். அதற்கு மேல் ஆற்றல் வரவரக் குறைந்து போய்விடும் என்று தற்போதைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறு கின்றனர். -

நான்காண்டுகளுக்குள்ளே ஒரு மனிதனின் ஆற்றலும் ஆண்மையும் முன்பிருந்ததைவிட நாளுக்குநாள் குறைந் துக்கொண்டே வருகின்றது என்கின்ற தத்துவத்தினைக் கொண்டுதான், நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்துப் பெற்றன என்பதற்கும் ஒரு கதை கிரேக்கத்தில் உண்டு,

(இக் குறிப்பை விளக்கும் கதையை, ஆசிரியரின் விளையாட்டுக்களின் கதைகள், பாகம் இரண்டு. என்னும் நூலில், ஒலிம்பிக் பந்தயத்தின் கதை எனும் பகுதியில் காணலாம்.)

ஆனல், மிலோவோ, இருபத்தி நான்கு ஆண்டுகள் தன் தேகத்திறனில் கிஞ்சித்தும் குறையாமல், வெஞ்சமர் புரிந்து வெல்லும் அஞ்சா நெஞ்சினகை, ஆற்றல் மிகு மறவனுக வாழ்ந்திருக்கின் முன். அத்தகைய ஆற்றல் மிகு வீரனைப் பற்றி அற்புதமான பல, கதைகள் அந்நாளில் உலவி வந்திருக்கின்றன.