பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21


மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகத்தான் கூறி யிருக்கின்ருர்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர் களுக்கு, புனித ஆலிவ் மலர் வளையம் பரிசு உண்டு. பாராட்டு உண்டு. புகழ் உண்டு என்று முன் கதையில் விவரித்திருந்தோம் அல்லவா! அதையும் விட, இன் னுெரு உரிமையை அந்த வெற்றி வீரர்களுக்கு அளித்திருந்தார்கள். அதாவது தங்களைப் போல சிலை ஒன்றைச் செய்து, ஒலிம்பியா மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான்.

சிலை அமைத்துக் கொள்வது என்பது சாதாரண வசதி படைத்தவர்களால் முடியாத காரியம். ஏராள மான நிதி வசதியுள்ளவர்கள் அல்லது அவ்வீரன்வாழ் கின்ற நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உதவி செய்தால்தான் உண்டு, வீரன் மிலோ எவ்வாருே தன்னைப் போல சிலை ஒன்றை செய்து முடித்து, தன் நகரத்திலிருந்து ஒலிம்பியா மைதானம் வரை தானே தூக்கிச் சென்று வைத்து மகிழ்ந்தானம். அப்படியென்ருல் அவனது ஆற்றலும் மனே திடமும். எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

அவன் உடல் வலிமையைப் புகழ்ந்து பேச வேறு பல கதைகளையும் கூறியிருக்கின்ருர்கள். அதையும் பார்ப்போம்.

மிலோ தன் உள்ளங்கையில் மாதுளங்கனி (Pomegranate) ஒன்றை வைத்து மூடிக் கொள்வானம். அதனை எத்தகைய சக்தி வாய்ந்தவன் வந்து அவன்