பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23


ரிப்பனை அறுத்தெறிந்து விடும் ஆற்றல் படைத்தவன் என்றும் கூறியிருக்கிருர்கள்.

மாபெரும் மல்யுத்த வீரனக வாழ்ந்தவன் மிலோ. சர்வ வல்லமை படைத்த விளையாட்டு வீரகை மட்டு மல்லாமல், தன் தாய் நாடு காக்கும் தியாக சீலனுகவும் விளங்கியிருக்கிருன். ஆண்மை மிக்க அரும்மறவர்கள் வாழும் நாடு, அனைத்து நலன்களையும் நிறைத் தல்லவோ வைத்திருக்கும்! அந்த லட்சியத்தில் தானே கிரேக்க நாடு, விளையாட்டுப் பந்தயங்களைப் பிரபலமாக நடத் திக் கொண்டு வந்தது!

கி. மு. 512ம் ஆண்டு, சிபேரிஸ் என்ற நாட்டுடன் அவனது நாடு போரிட நேர்ந்தது. அவனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த, மிலோ படைவீரர்கள் மத்தியிலே நின்று, உற்சாகப் படுத்தினனம். ஹிராகிலிஸ் என்பவன் வைத்திருந்த கதைபோல (பீமன்கதை போல) இவன் ஒன்றைச் செய்து எடுத்துக் கொண்டு, ஒலிம்பிக் பந்தயத்தில் பெற்ற வீர முடியை ஒய்யாரமாக அணிந்து கொண்டு, அந்த நாட்டுப் படைத்தளபதி போல, வீரர்களிடைய புகுந்து சென்று, உற்சாகமாகப் பேசி ஊக்கப்படுத்திப்போரிடத்துாண்டி ஞன். அந்த மாவீரனைப் பார்த்த போர் வீரர்களும், மனதில் வீரம்பொங்கப் போராடி வெற்றிபெற்ருர்கள். உயிருக்கும் அஞ்சாத வீரனுக நடைபோட்ட வண்ணம் மிலோ வீரர்களை ஊக்குவித்திருக்கிருன்.

(நமது நாட்டில் சீனுவுடன் போர் நடந்தபோது, நமது இராணுவ வீரர்கள் மத்தியில் சினிமா நடிக நடிகைகள் சென்று, ஆடிப்பாடி உற்சாகம் ஊட்டியதை யும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.)