24
வலிமைபெற்ற வீரன் ஒருவனுக்கு எங்கு சென்ரு லும் பெருமையும் புகழும் உண்டு என்பதற்கு மிலோ சான்ருக வாழ்ந்திருக்கிருன்.கணிதம் பயின்றவர்களுக்கு பித்தகோரஸ் என்னும் தத்துவ ஞானியின் பெயர் நன்ருகத் தெரிந்திருக்கும், கணித சாத்திரத்தில் வல்ல வர் அவர். அவரது மகள் மியூவா (Mnia) என்பவளை மிலோ தன் மனைவியாக்கிக் கொண்டிருக்கிருன்.
இவர்களுக்கு வாரிசாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மங்கையான அந்தப் பெண்ணே மணம்புரிந்து கொள்ள டெமாசீட்ஸ் எனும் மருத்துவன் வந்தான். அவன் அந்நாட்டு அரசருக்கு மருத்துவம் செய்பவன். புகழ்பெற்ற மருத்துவன், அந்த நாட்டு வழக்கப்படி, பெண் வீட்டாரே மணமகனுக்கு டெளரி போல வரதட்சணையாகப் பணம் தந்து எல்லா செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனல், வீரன் மிலோவின் நிலை வேறுவிதமாக அமைந்திருந்தது.மணமகனே மிலோவுக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து, அவனது மகளை மணம் புரிந்து கொண்டான். மிலோவின் புகழ், அவனது சமுதாய மரபையே மாற்றி அமைத்திருக்கிறது என்ருல் பாருங்களேன்.
இத்தகைய வீரனின் இறப்பை, சாதாரண மரணமாகக்கூருமல், வீரமரணமாகவே வரலாற்ருசிரி யர்கள் கூறியிருக்கின்ருர்கள். காட்டில் ஒருநாள் மிலோ தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். அப் பொழுது வழியிலே வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியில் சிறுபிளவு ஒன்று தெரிந்த தைப் பார்த்துவிட்டு, அதில் கையை விட்டுப் பெரி தாகப் பிளந்திட முயற்சித்தானம். வலிமை பொருந்திய வீரன், தன் சக்தியை வேண்டாத இடத்திலே சென்று