பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25


பரிட்சித்துப் பார்க்கப்போய், அடிமரத்தைப் பிளந்து கொண்டே போகும் பொழுது, திடீரென்று பிளவின் சக்திதிரும்பவே, எதிர்பாராத விதமாக பிளவின் இடையிலே மாட்டிக் கொண்டானம்.

பிரிக்கப்பட்ட அடிமரம் படீரென்று சேர்ந்து கொள்ளவே, அதன் இடையில் பிடிபட்டுப்போன மிலோவால் வெளிவரமுடியாமல் மாட்டிக் கொண்டு விட்டான். காட்டிலே தனியன். கதறினலும் துணைக்கு யார் வருவார்! அவன் அலறலைக் கேட்டு ஒநாய் கூட்டம் தான் வந்ததுபோலும் ஒநாய் கூட்டத்திற்கு அவன் இரையாகிப் போனன் என்பதாக அவன் முடிவைக் கூறுகின்ருர்கள். பலமுள்ளவன், பயனற்ற காரியம் ஒன்றைச் செய்து பலியாகிப் போனன் என்ப தற்கு உதாரணமாக, மிலோவின் ஜீவியம் முடிந் திருக்கிறது.

ஆண்மையும் ஆற்றலும் மிக்க வீரனை மிலோ தனது வயதான காலத்திலும் வீதியிலே நடந்து வருகின்ற பொழுது, பார்க்கின்ற இளைஞர்கள் எல்லோரும் மிலோவைப் போல தாங்களும் வர வேண்டும். வளர வேண்டும் என்று ஆசைப்படுவார் களாம். அத்தகைய கவர்ச்சி மிக்க வீரகை இருந் தான் மிலோ அவ்வாறு ஆசைப்பட்டவர்களில் ஒருவன் பெயர்டியிலஸ். இனி மிலோவைக் குருவாகப் பாவித்து தன்னை வளர்த்துக் கொண்ட பயிலஸ் என்பவனின் கதையைக் காண்போம்.