பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பண்பாட்டு வீரன் பயிலஸ்

வீரர்களைப் பார்த்த பின்னால், அவர்களைப் போலத் தானும் வரவேண்டும் என்ற லட்சிய வேகம் கொண்டு, வீரர்களாக ஆனவர்கள் எத்தனையோ பேர் வரலாற்றிலே உண்டு. அத்தகைய' வரிசயிைல்' தலை யாய இடம் பெற்றவன் பயிலஸ் (Phayllus) ஆவான்.

ஒலிம்பிக் பந்தயத்தில் போய் பயிலஸ் பங்கு பெறவில்லை. போட்டியிடவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் வெற்றி பெறாமலேயே, தன் நாட்டு மக்களி டையே மல்யுத்த வீரன் மிலோவை விட, பெரும் புகழ் பெற்றவனாக பயிலஸ் விளங்கினான் என்றால், அவனது சிறப்பாற்றலை என்னென்பது!

பயிலஸ் தாண்டும் ஆற்றல் மிக்க வீரன் ஆவான். அவன் வெகு விரைவாக ஒடிக்கடக்கும் விரைவோட்டக் காரனும் ஆவான். ஆனால், மற்ற நிகழ்ச்சியான மல்யுத் தம் செய்வதில் சுமாரான ஆற்றல் உள்ளவன். தட் டெறியும்போட்டியில் அதிக தூரம் எறிகின்ற ஆற்றலும் இல்லாதவன். ஐந்து நிகழ்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெறத்தக்க வல்லமை அவனுக்கு இல்லாவிட்டாலும், ஒரு சில உள்நாட்டுப் பந்தயங்களில் பெற்ற