பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வெற்றியையும் அதனால் அவனுக்குக் கிடைத்த பாராட்டையும் ஆசையையும் வைத்துக் கொண்டு, கி. மு. 480ம் ஆண்டு, கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச் செல்ல விரும்பினான். ஆசை வேகத் தின், ஆவேசத்தில் புறப்பட்டும் விட்டான்.

நாம் முன் கதையில் கூறியபடி, ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு முன், எல்லிஸ் என்னும் இடத்தில் ஒரு மாதத் தனிப் பயிற்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய கப்பலிலே பயிலஸ் பயணமானான். கிரேக்க நாட்டை பயிலஸ் அடைந்த பொழுது, ஒட்டப் பந்தயங்களில் கலந்து கொள்கின்ற காரியத்தை விட, வேறோரு முக்கியமான கடமை அவனுக்காகக் காத்திருந்தது போல, அவசரமாக அமைந்திருந்தது.

பாரசீக நாட்டின் கப்பல் படையானது, கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து, அதனை வென்று விடுகின்ற நிலைமையிலே போர் மூண்டிருந்த நேரம் அது. தான் எதற்காக வந்தோம் என்பதை பயிலஸ் மறந்தான். தாயகம் காக்கின்ற பெரும் பணியே அவன் தலையாய நோக்கமாக இருந்ததால், தான் வந்த சொந்த வேலையை மறந்தான்,

கிரேக்கக் கப்பல் படையுடன் தன் கப்பலையும் ஒன்றாக சேர்த்தான். மேற்குக் கிரேக்கப் பகுதியின் ஒரே பிரதிநிதியாக, கிரேக்கத்திற்காகப் பயிலஸ் போரிட் டான். இறுதியில், ஆட்டிப் படைத்த அச்சத்திற்கு ஆளாகி நின்ற கிரேக்கம், வெகுண்டு வந்த பகை வர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றது. கப்பல் படையுடன் வந்த பாரசீகத்தார், கதிகலங்கி கடலிலே கலம் செலுத்தி, விரைந்தோடி மறைந்தனர்.