பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

போர் முடிந்து, ஒலிம்பிக் பந்தயக் களம் நோக்கிப் புறப்பட்டான் பயிலஸ். பந்தயத்தில் கலந்துகொள்ள பரபரப்புடன் சென்று பார்த்தால், பந்தயங்கள் நடந்து முடிவு பெற்றிருந்தன. எழுச்சியுடன் வந்த வீரனுக்கு, ஏமாற்றமே பரிசாக அமைந்தது. அதற்காக அவன் கலங்கவோ, தன் விதியை சபித்துக் கொள் ளவோ இல்லை; நற்றவ வானினும் நனி சிறந்தத் தாயகத்தைப், போரிட்டுக் காத்தோம் என்று பரம திருப்தியடைந்து போனான் பயிலஸ். என்றாலும், பந்தயங்களில் தான் கலந்து கொள்ள வேண்டும், பரிசு பெற வேண்டும் என்ற ஆசையும் வேகமும் வெறியும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டே தான் இருந்தன.

இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பறந்தோடின. கி. மு. 478 ம் ஆண்டு பிதியன் பந்தயங்கள் நடந்தன அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பயிலஸ் மீண்டும் புறப்பட்டான். ஒரு தாண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, தவறி விழுந்து காலை காயப்படுத்திக் கொண்டான். அத்துடன் அவனது பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஆசையின் சகாப்தம் முடிவு பெற்று விட்டது.

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, ஆலிவ் மலர் வளையம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆவல். அவன் வாழ்நாளில் கடைசிவரை நிறைவேறாமலே போய் விட்டது. பாவம்!

சுய நலத்தில் அவன் ஊறியிருந்ததால், ' நாடு போனால் எனக்கென்ன' என்று கூறி விட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டிருப்பான். வெற்றியும்