பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பெற்றிருப்பான். ஆனால், பொது நலம் நிறைந்த, தியாகப் பண்புள்ள, கடமை வீரனாக இருந்ததால், அவன் நாடு காக்கும், நல் வீரனாகப் போரிட்டான். விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றிபெறாவிட்டாலும், வெற்றித்திருமகனாகத் திரும்பி வந்த பயிலசை,அவனது சேவையைப் புகழ்ந்து, அவனை ஏற்றுக் கொண்டு நாடே வாழ்த்தியது.

வரலாற்றில் தலையாய இடம் தந்தது. வளமான தேகம் தனி மனிதன் வாழ்க்கையை மட்டும் உயர்த்த அல்ல,வாழ்விக்கும் நாட்டிற்கும் சேவை செய்யத்தான், என்ற இனிய மொழிக்கு என்றும் சான்றாக அல்லவா பயிலஸ் திகழ்கிருன்! நாடு காத்த தீரனுக்கு ஏடுகள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தன. அதைவிடவேறு பரிசு என்ன வேண்டும்?