பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

(Theogenes)

உயிருக்கும் மேலாக, ஒலிம்பிக் பந்தயங்களை மதித் தார்கள் கிரேக்கர்கள். அதைப்புனித விழா என்று போற்றினார்கள். களங்கம் எதுவுமின்றி நடத்திட வேண்டும், என்று கவனத்தோடும் கருத்தோடும் பாதுகாத்தார்கள். தலைமைக் கடவுளான சீயசுக்குப் பன்றியைப் பலியிட்டு, அந்த ரத்தத்தின் மூலம் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டு விளையாட்டுக் களைத்தொடங்கினார்கள். போர்க்காலமாக இருந்தா லும், ஆயுதங்களை வேறிடத்தில் வைத்துவிட்டு, ஒரிடத் தில் பொறுமை காட்டி அமைதி காத்து, பந்தயங்களை நடத்திடவேண்டும் என்று விதிமுறை அமைத்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.

அவர்கள் மத்தியிலே தீரமுள்ளவர்கள், தியாகப் பண்பு நிறைந்தவர்கள்தானே திகழ்ந்திட முடியும்! தில்லுமுல்லுக் காரன் ஒருவன் வீரனாக சிறந்திருக்க முடியும் என்றால், அதுதான் தியாஜனிசிடம் இருந்த