பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பணிவுடன் வேண்டிக் கொண்டனர். அவன் செய்த பிழையை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

'மீண்டும் அந்த சிலை இருந்த இடத்திற்கு, அவனே துாக்கிக் கொண்டு சென்று வைத்து விட்டால், அவனை மன்னிக்கிருேம்' என்று ஊரார் உரைத்தவுடன், கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதன்படி அந்த சிலையைக் கொண்டு சென்று வைத்த சாமர்த்தியசாலி அவன்.

வலிமையுடன், வேறுபல திறமைகளையும் வளர்த் துக்கொண்டு எழில் வீர வாலிபனஞன் தியாஜனிஸ். ஒலிம்பியா சென்று, ஒலிம்பிக் பந்தயங்களில் 2 முறை வென்று புகழடைந்தான். ஒன்று குத்துச் சண்டைப் போட்டி. மற்ருென்று பங்க்ராசியம் எனும் போட்டி. அதாவது குத்துச் சண்டையும், மல்யுத் தமும் இணைந்து உருவான பயங்கரப் போட்டி அது.

அந்தப் பயங்கரப் போட்டியில், ஒரு வீரன் இன்னொரு வீரனை அடிக்கலாம். கடிக்கலாம். உதைக்க லாம். குத்தலாம். அழுத்தலாம். நகத்தால் பிருண்ட லாம்; என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என்ருல் பாருங்களேன். அத்தகைய பயங்கரப் போட்டியில் வென்றவன் தியாஜனிஸ்.

இதைத் தவிர, எங்கெங்கு போட்டிகள் நடந் தாலும், அங்கே போய் கலந்து கொண்டு, ஏறத்தாழ 1400 முறை வெற்றி பெற்றிருக்கிருன். 22 ஆண்டுகள் வரை, இவனை குத்துச் சண்டையில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை என்ற தன்மையில்; இவன் குன்ருத வலிமை கொண்டவனுக விளங்கினன்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான் என்ருல், அவன் உயர்ந்த ஆற்றல்மிக்கவீரன்