33
என்பதே பொருளாகும். அதனல், அவன் சாதாரணமாக நடக்கின்ற பந்தயங்களில் கலந்து கொள்ளவே கூடாது என்பது சம்பிரதாயம். அது ஒரு மனிதாபி மான அடிப்படையில் அமைந்திருந்த மரபும் ஆகும்.
மீறி யாராவது அவ்வாறு போய் கலந்து கொண் டால், அது நல்ல மதிப்பையோ, நாட்டாரிட ம் கெளர வத்தையோ அளிக்காது. ஆனல், இந்த தியாஜனிஸ் கொஞ்சம்கூட கெளரவம் பார்க்காதவன். அவனுக்கு வேண்டியது வெற்றியும் பரிசும்தான்.
மிகச்சிறிய அளவில் நடக்கின்ற போட்டிப் பந்தயங்களுக்கும் கூட தியாஜனிஸ் போவான். இவன் வருகையைக் கண்டவுடன், போட்டியில் பங்கு பெற வந்த போட்டியாளர்கள் பயந்து கொண்டு, போட்டி யிடாமல் விலகிக் கொள்வார்கள்.
பிறகென்ன? தியாஜனிஸ் போக வேண்டியது. வெற்றி வீரன் என்று அறிவிக்கப்படவேண்டியது. பரிசினைப் பெற்றுக் கொள்ளவேண்டியது. இப்படி யாகத்தான் 1400க்கு மேற்பட்ட வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்ருன் என்று சில வரலாற்ருசிரியர்கள் கூறுகின்ருர்கள்.
வெகுமதிக்காகத் தான் தியாஜனிஸ் இவ்வாறு வெறி கொண்டு அலைந்தான் என்று அவன் அரிய வரலாற்றை ஆராய்ந்தோமானல், இவன் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருந் தான் என்றும் அறிகிருேம். இப்படியும் ஒரு வீரன் இருந்தான் என்பதுபோல இவனும் வாழ்ந்தான்’ என்று தானே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது!