36
எவ்வாறோ அபராததொகையை சரிசெய்து, கடவுளுக்கான அபராதத் தொகையையும், நிர்வாகத்திற்கான அபராதத்தையும் கட்டிவிட்டான் தியாஜனிஸ். ஆனால், ஈதிமசுக்குக் கொடுக்க வேண்டிய ஈட்டுத்தொகை யைத்தான் அவனால் கொடுக்க முடியவில்லை.
எதிரி ஈதிமசை தனியே அழைத்தான். அவனிடம் ஒரு ரகசிய உடன் படிக்கையை செய்து கொண்டான். தன்னிடம் பணம் இல்லை என்றதால், தந்திரமான முறையிலே தான் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.
அதாவது, கி. மு. 476ம் ஆண்டு நடக்கப்போகின்ற குத்துச் சண்டைப் போட்டியில், தியாஜனிஸ் கலந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்துவிட வேண்டியது. அவ்வாறு வெற்றியை பெற்றுத்தரும் தியாஜனிசுக்கு அவன் கொடுக்க வேண்டிய அபராதத் தொகையை வாங்கிக் கொண்டதாக சரிகட்டிக் கொள்வது என்பது தான் அந்த ரகசிய உடன்படிக்கை, யாகும்.
ஒலிம்பிக் வெற்றியில் கொண்டிருந்த பேராசையின் காரணமாக, ஈதிமசும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டான். இது தெரிந்து போனதால், குத்துச்சண்டையில் பங்கு பெறவே கூடாது என்று தியாஜனிஸ் விலக்கப்பட்டுவிட்டான். மீண்டும், அவனால் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற முடியாமலே போயிற்று.
பணத்திற்காக எதையும் செய்கின்றபழக்கம், புனிதமான ஒலிம்பிக் பந்தயங்களிலும் பின்பற்றப் பட்டது. தான் பணம் கொடுத்து, லஞ்சம்போல தனது போட்டிப் பாதையை ராஜபாட்டையாக்கிக் கொண்ட