37
ஈதிமசும், தொடர்ந்து நடைபெற்ற கி. மு. 476, கி. மு. 472ம் ஆண்டுகளின் பந்தயங்களில் எளிதாக குத்துச் சண்டையில் வெற்றிபெற்று புகழடைந்தான். ஆனல், பங்கராசியப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ருன் தியாஜனிஸ். -
வெற்றி வீரன் தியாஜனிசின் வீரத்தையும் பலத்தை யும் பலரும் பாராட்டினர். அவனை கெளரவிக்கும் வகை யில், தாசஸ் நகரத்தினர் அவனைப்போல சிலை ஒன்றை யும் செய்து சிறப்புற நிறுவினர். தனக்கும் சிலை’ என்றதும், தியாஜனிசுக்குத் தலை கால் புரியவில்லை.
கருத்துக் குழப்பம் மிகுதியாகும் அளவிற்கு தியாஜனிஸ் நினைவில் கர்வம் பெருக்கெடுத்தோடி விட்டது. தன்னை மனிதப்பிறவி என்பதையே அது மறக்கடித்துவிட்டது. தன்னை மகேசன்பரம்பரை என்று மார்தட்டிப் பேசும் அளவுக்குக் கொண்டு சென்று விட்டது. அவனது டமார வாயும் அடிக்கடி அலற ஆரம்பித்து விட்டது.
ஆமாம், அவன் தன்னைப்பற்றி உயர்வாகப் பறை
சாற்றத் தொடங்கினன். 'ஹிராகிலிஸ் எனும் தெய்வம் வாழும் கோயிலில் பூசாரியாக வேலை செய்யும் மனிதரின் மகனல்ல நான், நான்
கடவுளின் குமாரன்’ என்ருன்.
ஆகவே, ஒரு குட்டிக் கடவுளுக்குரிய சகல வித மான பூசைகளும், புனிதச் சடங்குகளும், மரியாதை, யும் எனக்கு நீங்கள் செய்திடவேண்டும் என்று மக்களி டம் முதலில் வாதாடத் தொடங்கினன், பிறகு அனை வரையும் வம்பிழுக்கத் தொடங்கியும் விட்டான்.