பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

| | ||

38

ஒரு முறை கோயில் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, தனக்குரிய உன்னதமான

கெளரவம் தனக்குத் தரப்படவில்லையென்று கலாட்

டாவே செய்தான் என்று புளுடார்ச் எனும் ஆசிரியர் குறித்துக் காட்டுகின்றார்.

இப்படி தரம் மாறிப்போன தியாஜனிசுக்கு, அநேக விரோதிகள் அவனைச்சுற்றி எப்பொழுதும்இருந்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அவனை எதிர்த் திட யாருக்கும் தைரியமே இல்லை.

இவ்வாறு வாழ்நாள் முழுவதும் வரட்டு ஜம்பத் திலும் அதே சமயத்தில் வல்லமை நிறைந்தவனாகவும் இருந்து, மாற்றார்களும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினான் தியாஜனிஸ் என்றால், அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

இருந்த பொழுது அவனைப்பற்றி எல்லோரிடை யிலும் இருந்த மதிப்பு, இறந்த பிறகு இன்னும் அதிகமாயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நம் நாட்டில் முகராசி, கவர்ச்சி என்பார்களே, அது

அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுபோலும்.

தியாஜனிஸ் சிலை நிறுவப்பட்டது என்பதை முன்னரே கூறியுள்ளோம். தியாஜனிஸ் உயிரோடிருந்த போது, அவனை எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் எதிரி ஒருவன்.

அன்றைய தினம் ஆங்காரம் மிகுதியாகிப்போய், 'உயிரோடிருக்கும் பொழுதுதான் அவனை அடிக்க முடியவில்லை. அவனது சிலையையாவது அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்' என்ற நப்பாசை மிகுதியால், நள்ளிரவு நேரத்தில் சிலையருகே