40
பேர் ராசிக்கு இன்னும் உயிர் இருந்தது போலும்! அது வேலை செய்யத் தொடங்கிற்று.
தியாஜனிஸ் வாழ்ந்த நகரமான தீசஸ் நகரத்தில் பஞ்சம் பெருகியது. பயிர்கள் விளைச்சலிழந்தன. நாடே வறுமையில் உழலத் தொடங்கியது. மருண்ட மக்கள், வேறு வழி அறியாது டெல்பி (Delphi) எனும் இடத்திற்குச் சென்று அருள்வாக்குக் கேட்க நின்றார்கள். அப்பொழுது அசரீரி (Oracle) ஒன்று எழுந்தது.
"தாசஸ் நகரத்து அதிகாரிகள், தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் திரும்பவும் அழைத்துக்கொள்ள வேண்டும் "என்று அசரீர் ஆணையிட்டது.
அஞ்சிக் கொண்டிருந்த அதிகாரிகள் அந்த ஆணைக்கு அடங்கினர். அதன்படி எதிரிகளை அழைத்து அர வணைத்துக் கொண்டனர். என்றாலும் பஞ்சம்போன பாடில்லை. பழைய நிலையே நீடித்து வந்தது. ஆகவே மீண்டும் டெல்பியை நோக்கிப் படையெடுத்தார்கள் தங்கள் குறையைச் சொல்ல.
"நீங்கள் தியாஜனிசை மறந்து விட்டீர்கள்" என்று அசரீரீ சொல்லிவிட்டது. தியாஜனிஸ் இறந் தல்லவோ போய்விட்டான்! அவனை எங்கே போய் பிடிப்பது? அர்த்தம் விளங்காமல் துடித்துப் போய் நின்றவர்களுக்கு, வைத்த சிலையின் ஞாபகம் வந்தது.
அதைத்தான் நடுக்கடலில் போய் தூக்கியெறிந்து விட்டோமே என்ற நினைவு வந்ததும், பெரிதும் குழமபினர்கள். கடலில் போய் எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? பஞ்சப் பிரச்சினையை விட பெரிய பிரச்சினையாக இந்த நினைவு வாட்டி வதைத்தது.