பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



41


சில நாட்கள் கழித்து, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று, வலைவீசிய பொழுது, தியாஜனிஸ் சிலை வந்து சிக்கிக் கொண்டது. கனமாயிருக்கிறது என்று கஷ்டப்பட்டு வலையை இழுத்தவர்களுக்கு சிலையாயிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், அதிகாரிகளை ஆனந்தப்படுத்த அதுவே போதுமான தாக அமைந்துவிட்டது.

சிலை வந்து சேர்ந்து, பீடத்தில் அமர்த்தப்பட்ட போது, தாசஸ் நகரத்துப் பஞ்சம் தீர்ந்து செழிப் படைந்தது, மக்களுக்கு தியாஜனிஸ் மேலிருந்த அன்பு மாறி இப்பொழுது பக்தியாகிவிட்டது.

மீண்டும் சிலை காணுமற் போனல் கஷ்டத்துக்குள் ளாக நேரிடும் என்று எண்ணிய அவர்கள், அந்த சிலையை பீடத்தோடு பீடமாக சேர்த்து, இரும்புச் சங்கிலியால் பிணைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் "பயபக்தி அதிகமாயிற்று.

‘வாழ்க்கையில் அபரிதமான வலிமையும் ஆற்ற லும் கொண்டு வாழ்ந்த வீரர்களைப் போற்றி வைத் திருக்கும் சிலைகளுக்கு, நோய்களைத் தீர்க்கும் தெய்வ சக்தி வந்து விடும் என்ற நம்பிக்கை, அக்கால மக்களுக்கு இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் விளைவாக தியாஜனிஸ் சிலைக்கு மேலும் புகழ் வந்து குவியலாயிற்று.

நோய்களைத் தீர்த்து வைக்கும் தெய்வசக்தி நிறைந்தது நம் தியாஜனிஸ் சிலை என்று தாசஸ் நகரத்து மக்களின் நம்பிக்கையின் வேகம் பெருகலாயிற்று. அதனுல் அந்தச் சிலையைத் தரிசிக்க வருபவர்களின் கூட்டமும் பெருகலாயிற்று.

3