44
இத்தாலியின் மேற்குக் கரையோரப் பகுதியில் தெமி'சா என்ருெரு நகரம் இருந்தது. அந்த நகரில் பொலேட்ஸ் என்ருெரு வீரன் இருந்தான். அவன் ஒரு சமயம் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அகால மரணமடைந்து விட்டான். அதன் பின் அந்த வட்டாரத்தில் அவன் பேயாகத் திரிந்து கொண்டி ருந்தானம்.
பேயாகத் திரிந்த பொலேட்ஸ். தெமிசா நகரத்து மக்களை ஒரு பயங்கர நிலைக்கு ஆளாக்கியிருந்தான்.
அதாவது, வருடத்திற்கு ஒருமுறை தனக்கொரு கன்னிப்பெண்ணைக் கொண்டு வந்து காணிக்கையாகத் தரவேண்டும் என்று தெ மிசா நகரத்து மக்களைத் தொந்தரவுசெய்து பயமுறுத்தி வந்தான். பெண்ணுசை பேயையும் விடவில்லை பார்த்தீர்களா?
தெ மிசா நகரத்து மக்களும், அஞ்சி நடுநடுங்கி வருடம் ஒரு பெண்ணைத் தானே இழக்கிருேம் என்று மனதைத் திடப்படுத் திக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அழகான பெண்ணுெருத்தியை அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். (பகாசூரன் ஒரு பையனையும் உணவையும் கேட்டதாகவும், பீமன் சென்று பகா சூரனைக் கொன்றதாகவும் நம் நாட்டுப பாரதக் கதையில் இருக்கிறதே!)
வழக்கம் போல, பேய்க்குப் பெண்ணை அனுப்பு கின்ற நாளும் வந்தது. கன்னிப் பெண்ணையும் தேர்ந்தெடுத்தாகி அனுப்புகின்ற சமயத்தில், ஈதிமஸ் அந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அழகே உருவான ஒரு பெண் நிற்பதைக் கண்டான்.