பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்

கிளியோமிடஸ் என்பவன் சிறந்த குத்துச்சண்டை வீரன். அஸ்திபாலா எனும் நகரத்தைச் சேர்ந்தவன். ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் சென்றவனுக்கு எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன தெரியுமா?

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இகஸ் (lccus) என்பவனுடன் பொருத நேர்ந்தது. இறுதிப் போட்டியான அந்தப் போட்டியில், இருவரும் கடுமை யாகக் குத்திக் கொண்டனர்.

படாத இடத்தில் அடிபட்டு இகஸ் மரணமடைந்து விட்டான். எதிர்பாராத விதமாக இது நடக்கவில்லை என்று ஒலிம்பிக் அதிகாரிகள் முடிவு செய்து, கிளியோமிடிசை அந்தப் போட்டியிலிருந்து விலக்கி விடுகின்றாகள்.

வெற்றிக்கு வெற்றியும், புகழும் புனிதமும் மிக்கப் பரிசும் பறிபோன நிலையில், கிளியோமிடஸ் மனமுடைந்து ஊருக்குத் திரும்பிவந்து கொண்டிருந்