பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

"விளையாட்டு உலகில் வீரக்கதைகள்’ எனும் இந்நூல், வீர தீரம், சாகசம் நிறைந்த சகலகலா வல்லுநர்களாக விளங்கிய கிரேக்க நாட்டு விளையாட்டு வீரர்களின் சுவையான வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கு வதாகும்.

விருப்பத்தினுல் தான் விளையாடுகிருேம்; வேறு வேலை எதுவும் இல்லாத பொழுது விளையாடி மகிழ்கிறோம் தேவைக்கு மேலே தேகத்தில் சக்தி இருப் பதால், அதனை மகிழ்ச்சிப் பொழுது போக்குக்காகப் பயன் படுத்த விளையாடுகிறோம், என்றெல்லாம் இன்று விளையாட்டு பற்றி விமர்சனம் செய்வார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர். கீர்த்திமிக்க நாடாக விளங்கிய கிரேக்கம், மக்களுக்கு உடல் வலிமை தான் மிகவும் அவசியமான தேவை என்பதை வற்புறுத்தியும் வலியுறுத்தியும் வந்ததோடல்லாமல்,வாழ்கையையே அதன்விளை நிலமாகவும் ஆக்கி விளை வித்தது. மகிழ்வித்தது.

அதன் பயனக, சக்தி நிறைந்த சமுதாயம் செழித்து வளர்ந்தது. அதன் வழியே, சக்தியினை சோதித்துப் பார்க் கும் விழாக் கோலமாகவும் வளர்ந்தது. மத அடிப் படையின் காரணமாக, கடவுளின் பெயரிலே போட்டிப் பந்தயங்கள் உருவாயின. வீரர்கள் அப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினர்கள்.