48
ஆத்திரத்துடன் விரட்டிக் கொண்டு வந்த அஸ்திபாலா நகரத்தினர், கோயிலுக்கு வெளியே வந்து நிற்கின்றனர். கதவு உள் தாழ்ப்பாள் போட்டி ருப்பதைக் காண்கின்றனர். நீண்ட நேரப் போராட் டத்திற்குப் பிறகு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடு கின்றனர்.
அவனைக் காணவில்லை என்ற கோபத்தில் பெட்டிக்குள் தான் அவன் இருக்கிறான் என்று கத்திக், கொண்டே கனத்த பெட்டியை வெகுநேரம் கஷடப் பட்டுத் திறக்கின்றனர். பெட்டியும் காலியாகக் கிடைக்கிறது.
என்ன ஆச்சரியம்! கிளியோமிடஸ் அங்கும் இல்லை கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்தோம். வேறு எங்கே போயிருப்பான்! வெளியே செல்ல வழி ஏதும் இல்லையே? என்று வியப்பாலும் அச்சத்தாலும் சிலையாகி நின்றனர் அனைவரும்.
பிறகு, தங்களது முக்கியமான மனிதர்களில் சிலரை டெல்பி எனும் இடத்திற்கு அனுப்பி, அருள் வாக்குக் கேட்டு வருமாறு அனுப்புகின்றனர். 'கிளியோமிடஸ் என்ன ஆனான், எங்கே போனான்' என்று கேட்ட அஸ்திபாலா நகர முக்கியஸ்தர் களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி.
'குத்துச் சண்டைக்காரர்கள் என்றால் கடவுளுக்குக் கருணையுள்ளம் உண்டு. இப்பொழுது அவன் குட்டிக் கடவுள். (Demigod) ஆகிவிட்டான். ஆகவே, அவனுக் குள்ள மரியாதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும்