49
என்று அந்த அசரீரீ கூறியது. கேட்டவர்கள் கலங்கிப் போனார்கள்.
அவர்களும் வேறு வழியின்றி அசரீரீ வாக்கை தேவ வாக்காக ஏற்றுக் கொண்டு, கிளியோமிடஸை குட்டித் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
சாதாரண வாழ்க்கையிலே சரித்திரப் புகழைப் பெற முடியாத கிளியோமிடஸ், குட்டித் தேவதை யாக மாறுகின்ற பெரும் பேரினை பெற்றுக்கொண்டான்.
சிறந்த வீரர்களுக்கு வரலாற்றில் மந்திர தந்திர சக்தியை புனைந்து, பரபரப்பு ஊட்டும் மாயா ஜாலக் கதைகளை கற்பனை சாதுர்யத்துடன் படைத்துவிடு கின்ற ஆற்றலை, கிரேக்கர்கள் சற்று அதிகமாகவே பெற்றிருந்தார்கள் போலும்.
அக்காலத்தில் அத்தகைய கதைகள் ஆனந்த உலகத்திற்கு உழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இது போன்ற மாயா ஜாலக்கதைகள் நம்மை ஒரு புதிரான, புரியாத புதிய உலகிற்குத்தான் அழைத்துச் செல்கின்றன. இத்தகைய வீரக்கதைகள் சில சமயங் களில் நமக்கு கோரக் கதைகளாகவும் தெரிகின்றன.