பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வலிமைக்கோர் பொலிடாமஸ்

(Polydamas)

தெசாலி என்னும் பகுதியில், ஸ்காட்டுசா என்னும் நகரில் வாழ்ந்து வந்தான் பொலிடாமஸ். இவன் பங்கராசியம் எனும் குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த பயங்கரப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ருன். கி. மு. 408 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்டு, ஒரே முறைதான் வெற்றி பெற்ருன் என்ருலும், இவன் புகழ் மாவீரன் மிலோவையும் மிஞ்சக் கூடியதாக அமைந்திருந்தது.

இவன் மிகுந்த வலிமையுடையவன் என்பதனல் மட்டும் மற்றவர்கள் பொலிடோமலைப் புகழவில்லை. எல்லா ஒலிம்பிக் வீரர்களையும் விட உயரமானவனுகவும் இருந்தான் என்பதனால்தான் என்று கூறுகிருர் பசானியாஸ் எனும் ஆராய்ச்சி வல்லுநர்.

வலிமையில் மிகுந்தவன் பொலிடாமஸ் என்பதை வற்புறுத்துகின்ற வகையிலே பல கதைகள் உலவி வருகின்றன.