5i
ஒலிம்பியஸ் என்ற மலைக்குப் போனளும் பொலி டாமஸ். தன்னந் தனியணுகப் போனவன் எதிரே சிங்கம் ஒன்று எதிர்பட்டுத் தாக்கியபோது, அவன் தன் வெறுங் கையாலேயே அடித்துக் கொன்ருன் என்ப தாக ஒரு கதை. இது அவைைடய அஞ்சாமையையும் போரிடும் ஆற்றலையும் விளக்குவதாக அமைந்திருப் பதைக் காணலாம்.
ஒருமுறை பொலிடாமஸ், ஒரு காளைமாட்டின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண் டானம்; தப்பி ஓடுவதற்காகத் திமிறிய கொழுத்த காளையினை இவன் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாம்ை. முழு முயற்சியுடன், முண்டி யடித்துக் கொண்டு, அவன் கையிலிருந்து காளை தப்பித்து ஓடிவிட்டது என்று பார்த்தால், பொலி டாமசின் கைகளில் காளைமாட்டின் குளம்புகள் இருந் தனவாம். இந்த நிகழ்ச்சியையும் அவன் அரிய வலிமையை விளக்குவதற்காகக் குறித்திருக்கின்றனர்.
பந்தயக் குதிரைகள் போல பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்று, வேகமாக ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் பின் புறம் இவன் சென்று, ஒரு கையால் வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான் என்பதாக மற்ருெரு நிகழ்ச்சி.
இவன் வலிமை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் பரவியது. பொலிடாமசின் பலத்தைப் பற்றி பலபட க் கேள்விப்பட்ட பாரசீகத்து மன்னன், தன் அரசவைக்கு அவனை வரவழைத்தான். தன் மெய்க்காப்பாளர்கள் மூவரை அவனுக்கு அறிமுகப்