பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

படுத்தி, இவர்களை வென்று அவனது வலிமையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டான். அதை சவா லாகவே ஏற்று, சக்திமிகுந்த அந்தமூன்று வீரர்களையும் வென்று தன் வலிமையை நிரூபித்தான் என்பதாக மற்ருெரு நிகழ்ச்சி.

இவ்வாறு சக்தியும் திறமையும் மிக்க பொலி டாமஸ், கி. மு. 404ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத் திற்கு வந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற போட்டியில், மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளச் சென்ருன். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அதுபோல் அவன் நிலையாயிற்று.

அவனும் சாதாரண மனிதன் போல் நாளுக்கு நாள் நலிந்து வருகிருன் என்பது போல நிலை ஆயிற்று. புரோமாகஸ் எனும் வீரனிடம் பொலிடாமஸ் தோற்றுப்போனன். சிங்கத்தைக்கொன்றவன். பாரசீக வீரர்களை வென்றவன். புரோமாகஸ் எனும் வீரனிடம் தோற்றுப் போனனே என்ருலும், பொலிடாமசின் வீரம் பழுதுபட்டுப் போகவில்லை. பாழாகி விடவில்லை; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு இரு கண்கள் போன்றவை தானே. பொலிடாமசும் வீரத்துடனே தோல்வியை ஏற்றுக்கொண்டான்.

இத்தகைய ஆற்றல்மிக்க வீரனின் மரணமும் மிலோவின் மரணம் போலவே, வீரமரணமாக அதாவது வலிமை மிக்க மரணமாகவே அமைந்து விட்டிருந்தது.

ஒருநாள், பொலிடாமஸ் தன் நண்பர்களுடன் நிழலுக்காக ஒரு குகையில் தங்கியிருந்த பொழுது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்