பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் பொலிடாமஸ்.

அவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள் ளேயே நசுங்கி செத்துப் போன்ை.

"வீரர்கள் சாதாரணமாக இறப்பதில்லை. வீர மரணமே எய்துவார்கள் என்ற நெறியை இதுவரை நாம் படித்த எல்லா கதைகளுமே வலியுறுத்திக் கொண்டே தான் வருகின்றன. பொலிடாமஸ் கதையும் அது போலவே அமைந்திருக்கிறது. வியப்பில்லையே!