8. வாயாடி டியோக்சிபஸ்
(Dioxipaus)
வாழ்க்கையில் மனிதன் உயர உயர, அவன் வாயடக்கமாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளும் பொழுதுதான், அவன் பெறுகின்ற புகழும் பேறும் நிலைத்து நிற்கிறது. அவன் சிறிதளவு தன் நிலையி லிருந்து தாழ்ந்து விட்டாலும், அது அவன் புகழை இடித்துத் துாளாக்கும் வெடிகுண்டாகிவிடும். அதற்கு சான்ருகத் திகழ்கிருன் டியோக்சிபஸ்.
கி. மு. 336ல் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியம் எனும் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் டியோக்சிபஸ். எந்தப் போட்டியாளனும் இவனுடன் போட்டியிடப் பயந்து ஒதுங்கிக் கொண் டான் என்ருல், இவனது வல்லமையின் மிகுதியை நினைத்துப் பாருங்கள்! பெற்ற வெற்றியையும், பெருமை மிகு பரிசையும் ஏந்திக் கொண்டு, டியோக் சிபஸ் தன் தாயகமான ஏதென்சுக்கு வருகிருன்.
வெற்றி வீரனுக்கு வீர வரவேற்பளிக்கிறது ஏதென்ஸ் நகரம். வலிமையின் தாயகமான ஏதென்ஸ் நகரமே திரண்டு வந்து, வானளாவிய வாழ்த் தொலியை எழுப்பி வரவேற்றது. உற்சாகம் பெற்ற மக்கள், வீரனே சாரட்டு வண்டியிலே உட்கார வைத்து