56
அதிர வைத்தன. அது அவள் தங்கையின் வாழ்க்கை யையும் பாதித்தது. கேலி மொழி ஒரு குடும்பத் தையே பாழாக்கிவிட்டது!
நாடறிந்த ஒருவன் எதைப்பற்றிப் பேச வேண்டு மென்ருலும் யோசித்து, நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்பது இதல் புலளுகின்றதன் ருே!
டியோக்சிபஸ் மாவீரனகத் திகழ்ந்ததால், அவனுக்கு அரண்மனையில் பணியாற்றும் பெரும்பேறு கிடைத்தது. அவன் மகா அலெக்சாந்தரின் மனங் கவர்ந்த வீரனுகி விட்டான். மன்னன் அருகில் இருந் திடும் வாய்ப்பும் கிட்டி விட்டதென்ருல், மாபெரும் பொறுப்பும் வந்துவிட்டது என்பது தானே பொருள்!
பாரசீகத்தின்மீது படையெடுத்து விட்டிருந்தான் மகா அலெக்சாந்தர். படைகள் செல்கின்ற போது, மன்னனுடன் டியோக்சிபஸ்-ம் கூடவே செல்ல வேண்டிய தாயிற்று. செல்கின்ற வழியில் காரக்ஸ் எனும் மற்ருெரு வீரனுடன் வாய்வார்த்தை முற்றி, அதுவே சவாலிடும் அளவுக்கு வளர்ந்து, கடைசியில் துவந்த யுத்தம் (Duel) பண்ணுகின்ற தன்மைக்கு முற்றி விட்டது.
காரக்ஸ் என்பவன் கையிலே வேல். ஈட்டி, சுத்தி முதலிய பயங்கர ஆயுதங்களுடன், உடல் முழுவதும் இரும்புக் கவசம் பூட்டிக் கொண்டு வந்து நின்ருன். டியோக்சிபசோ, பிறந்த மேனியனுக, தேகம் முழுவதும் ஆலிவ் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, கையில் ஒரு கதாயுதத்துடன் (Club) வந்து எதிர் நின்ருன் துவந்த யுத்தம் கோபாவேசமாகத் தொடங்கியது.