பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$7

முதலில் காரக்ஸ் எறிந்த வேலை, கதையால் தட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டான் டியோக்சிபஸ். பிறகு குறிபார்த்து எறிந்த ஈட்டியையும் தடுத்துத் தள்ளி விட்டான். முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த காரக்ஸ், கத்தியை உறையிலிருந்து உருவ முயன்றபோது. ஒரு கையைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவனைத் தடுமாறி விழுமாறு தள்ளிவிட்டான். ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியப் போட்டியில் வெற்றி பெற்ற வீரனல்லவா இவன்!

மல்யுத்த தந்திர முறைகள் தெரிந்திருந்ததால், அந்த காரக்சைத் தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த அவனது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, கோபமாக அழுத்திக் கொண்டிருந்தான்.

இவ்வாறு செய்த டியோக்சியஸ்லின் செயல் அலெக்சாந்தரது படைவீரர்களுக்கு, ஆனந்தத்தை அளிக்கவே, அவர்கள் ஆனந்த ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்கள். ஆனல், காரக்சு என்றiரனே அலெக்சாந்தருக்குக்கினேயாக வந்த மெசிடோனியன் எனும் மன்னர் படையைச் சேர்ந்தவன்.

ஆகவே, அந்த மன்னனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் இது பெரிதும் வெறுப்பையே தந்தது. அவர்கள் ஒருவாறு சமாதானம்செய்து, இருவரையும் சண்டை போடாமல் விலக்கி விட்டார்கள்.

இந்த சண்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, டியோக்சிபஸ் முன்போல தனது மன்னனின் அன்புக்குரியவகை இல்லாமல், சற்று ஒதுங்கியே இருந்து வந்தான். அலெக் சாந்தர் மன்னன் இவன் மேல் கோபமாக இருக்கிருன், முன்போல அன்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டு

4