போட்டியானது புனிதம் மிகுந்ததாகக்கருதப்பட்ட தால், போட்டியின் விதிகள் மிகவும் கடுமையானதாக இருந்தன. என்றாலும், உழைப்புக்கும் உணர்வுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, வீரப் போட்டி களில் கலந்து கொள்ளும் வீறுடன் புறப்பட்டான்.
தோல்வி பெற்றவர்கள் எல்லாம் பாராட்டப் படாமல், புறம் தள்ளி விடப்பட்டார்கள். ஆனால் அதற்கு மாறாகவெற்றிபெற்றவர்கள் புகழ் விண்ணளாவ பறந்தது. வீரர்கள் பாராட்டப் பட்டார்கள். அவர் களேப்பற்றி எழுதத்தலைப் பட்டவர்கள், மனிதனுக்குரிய சாதாரண சக்தியையும் வீரதீரத்தையும் மட்டும் குறிக்காது. தெய்வ சக்தியையும் காட்டி அவர்கள் வரலாற்றுடன் இணைத்தும் விட்டனர்.
பழைய ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற்ற வீரர்களில் மிகவும் புகழ் பெற்ற வீரர்களில் பத்து தீரர்களைப் பற்றித்தான் இந்நூல் மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறது.
கதையின் போக்கு எப்படியிருந்தாலும், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கருத்து ஒன்றுதான். கிரேக்கர்கள் உடலைப் போற்றிப் புகழ்ந்து வளர்த் தார்கள். பெருமை படுத்தினர்கள். உண்மையான வீரம் சமுதாயத்தால் போற்றப்பட்டது. ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பது ஒன்றே.
பலம் வாய்ந்த உடலை நாம் பெறவேண்டும். பல ருக்கும் உதவி, பயனுள்ள வாழ்வு வாழவேண்டும். நமது இளந் தலை முறையினர், என்னும் ஆசையில், வரலாறு நிகழ்ச்சிகளில் முன்னேடியாக விளங்கியிருக்கும் வீரர் களின் வரலாற்றை நமது தமிழக இளைஞர்கள், தாய்க் குலத்திடம் தந்திருக்கிறேன்.