9. தனிவரம் பெற்ற தயாகரஸ்
ஒருவர் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெறுவது என்பதுவே மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்தி. அதிலும் ஒரு பரம்பரையே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுகின்றது என்ருல், அது வீரப் பரம்பரையாகத் தானே இருக்கமுடியும்!
அத்தகைய திறமை மிக்கப் பரம்பரையை தொடங்கி வைத்துச் சிறப்படைந்தவன் தயாகரஸ் என்ற வீரன். இவன் குத்துச் சண்டையில் கி. மு. 464ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தான். இவன் செய்த சண்டையின் சிறப் பினையும் நுண் திறனையும் அறிந்த பிண்டார் எனும் பெரும் கவிஞர், எழுச்சி மிக்கப் பாடலால் இவனது வீரத்தைப் புகழ்ந்து பாடினர். அந்தப் புகழ்ச்சி வரிகள், அன் எனும் கோயில் சுவர்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தன என்று ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது.
இத்தகைய இணையிலா வீரனின் பரம்பரையும் இவனைப் போலவே, வீரமிக்கவர்களாக, வெற்றியாளர் களாகவே விளங்கியிருக்கிருர்கள்.