பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தயாகரசின் மூத்த மகன் டமாகெடஸ் (Damagetus) என்பவன். பங்கராசியம் எனும் போட்டி யில், 452ம் ஆண்டில் வென் ருன். அதனைத் தொடர்ந்து கி, மு. 448ஆம் ஆண்டிலும் வென்று தன் வெற்றியின் மேன்மையை நிலைநாட்டினன்,

மூத்தவனுக்கு இளையவன் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிப்பது போல், தயாகரசின் இரண்டாவது மகன் அகுசிலாஸ் (Acusilaus) என்பவனும் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ருன்.

கி. மு. 464ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தய மைதானத்திற்குள் நுழைந்த தயாகரஸ், தன் மைந்தர்கள் வெற்றியைக் கான 16 ஆண்டுகள்கழித்தே வந்திருந்தான் பந்தய மைதானத்திற்கு. இரண்டு மைந்தர்களும் வெற்றிபெற்ற பிறகு, தங்களது தந்தையை தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து பொழுது, வீரமக்களைப் பெற்ற மாவீரன் தயாகரஸ் என்று எல்லோரும் வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

இந்த பரம்பரையின் வீரம் இத்துடன் முடிந்து போய் விடவில்லை; தயாகரசின் மூன்ருவது மகன் டோரியஸ் (Doreeus) என்பவன், பங்கராசியம் எனும் போட்டியில் கி.மு. 432 கி.மு 428, கி.மு 424 ஆம் ஆண்டு களில் நடந்த மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்தாற் போல வென்று, தன் தந்தையின் புகழ் வரலாற்றில் மேலும் பல இனிய வாழ்த்துக்களேச் சேர்த்தான்.

மகன்களின் வீரம் தயாகரசை பேரானந் தத்தில் ஆழ்த்தியது என்ருல், தயாகரசின் மகள்