பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

பிரனிஸ் என்பவள், ஒலிம்பிக் பந்தய வரலாற்றிலே பெரும் புரட்சியையே செய்துவிட்டாள்.

பிரனிஸ் (Psrenics) என்பவளும் ஒரு ஒலிம்பிக் பந்தய வெற்றிவீரனைத் தான் மணந்து கொண்டி ருந்தாள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் அவனுக்கு பிசிடோரஸ் என்று பெயரிட் டார்கள். அவனைக் குத்துச் சண்டை வீரனுக்கி, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்று, வீர பரம் பரையின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான் அவனது தந்தை. தன் கணவன் அகால மரணமடைந்து விடவே அவனுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை தாயான பிரனிஸ் ஏற்றுக்கொண்டாள்.

பிசிடோரசும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் தகுதி பெற்று விட்டான். பந்தயத்தில் நடக்கும் போட்டியில் தன் மகன் எப்படி சண்டை இடுகிருன் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை, தாய்க்குத் தாயாயும் சண்டை பயிற்சிக்குக் குருவாகவும் விளங்கிய அவளுக்கு இருக்கா தா என்ன? அவள் ஆசைக்குக் குறுக்கே நின்றது கிரேக்க நாட்டுச் சட்டம்.

பந்தய மைதானத்திற்குள் பெண்கள் நுழையக் கூடாது என்பதுதான் கடுமையான சட்டம். மீறி யாராவது வந்ததையோ, மறைந்திருந்துப் பார்ப் பதையோ கண்டுபிடித்துவிட்டால், பிடிபட்டவர் களுக்கு உடனே மரணதண்டனை என்பதுதான் அந்தக் கொடுமையான சட்டம்.

பிரனிஸ் தன் உயிரைத் துச்சமாக மதித்தாள். தன் மகன் சண்டையிடுவதைப் பார்த்தேயாக