62
வேண்டும் என்று முடிவெடுத்தாள், ஆணைப்போல் மாறு வேடம் அணிந்தாள். பந்தய அரங்கிற்குள் நுழைந்து, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். பந்தயங்கள் தொடங்கின. பிரனிஸ் மைந்தன் பிசிடோரஸ் குத்துச் சண்டை தொடர்ந் தது. தன் மகன் வெற்றி பெற்ருன் என்று அறிந்த தும், பார்வையாளர்கள் பகுதியிலிருந்த பிரனிஸ், பாய்ந்து சென்று, தன் மகனை ஆரத் தழுவி, முத்தி மிட்டுக் களிகூர்ந்தாள்.
அந்த வேகத்திலும் ஆவேசத்திலும் தன்னை மறந்தாள். அத்துடன் நின்ருல் பரவாயில்லையே! அவளது ஆடை குலைந்தது. மாறுவேடம் கலைந்தது." பெண்ணுெருத்தி உள்ளே வந்துவிட்டாள்" என்ற பெருங்குரல் அரங்கிற்குள்ளே அலறியது. சட்டத்தை மீறிய பெண்ணைத் தண்டிக்க வேண்டுமென்ற நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டாள்.
பிரனிஸ் தன் கதையைக் கூறினுள். தன் பரம் பரையைப் பற்றிக் கூறினுள். தன் மகனுக்குத் தான் பயிற்சி அளித்த விதத்தை விவரித்தாள். தன் மகன் சண்டையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விளக் கினால். 'தன் கடமை முடிந்தது. தன் உயிரைத் தர தனக்கு ஆட்சேபனை இல்லை. மரண தண்டனையை மனமார வரவேற்கிறேன்' என்று வாக்குமூலம் அளித்தாள்.
அப்பொழுதுதான் ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு உணர்வு வந்ததுபோலும். பெண்களுக்கும் போட்டி யில் இவ்வளவு ஆர்வமா என்று புரிந்து கொண் டனர். கடுமையான விதிகளைத் தளர்த்திட விரும் பினர், பெண்களும் பந்தய மைதானத்திற்குள்