பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

வரலாம் என்று அனுமதி அளித்தனர். பின்னர் பெண்கள் பந்தயத்தில் கலந்து கொண்ட வரலாறும் தொடர்ந்தது.

இவ்வாறு உயிரையும் திரணமாக மதித்து, ஒலிம்பிக் விதிகளையே மீறி புரட்சியையும் புது மாற்றத்தையும் அளித்த பிரனிஸ், தன் தந்தை தயாகரசுக்கு மேலும் புகழினையே அளித்திருக்கிருள்.

ஆரம்ப காலத்தில், பெண் குலத்திலிருந்து ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்க்க அனுமதித்திருந்தனர். அவள் கோயில் தலைமைப் பூசாரியான பிரிஸ்டஸ் ஆப் QLufl_i (Priestesc of Demeter). பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வீரனுடைய தாய் தந்தை, மகன் என்பவர்கள் மட்டுமே வரலாம் என்றுஅனுமதித்திருந்தனர்.

வருபவர்கள் ஆணு பெண்ணு என்பதை அறிய பந்தயத்தில் போட்டியிடும் வீரர்களைப் போலவே, பயிற்சியாளர்களும் பிறந்த மேனியுடனே வரவேண்டும் என்ற கடுமையான வழியையும் ஏற்படுத்தி னர்கள்.

இவ்வாறு தயாகரஸ் பரம்பரையினர், ஒலிம்பிக் பந்தயங்களில் தோன்றி, ஒரு புது சகாப்தத்தையும் பெரும் புரட்சியையும் உண்டு பண்ணிவிட்டார்கள். தயாகரஸ் தனி வரம் பெற்ற வீரன் போலவே கிரேக்க வரலாற்றில் கீர்த்தியுடன் இன்றும் விளங்கு கிருன். ஏனெனில்,

'தக்கார் தகவிலார் என்பார் அவரவர்தம் எச்சத்தார் காணப்படும்’ என்பது பொய்யா மொழியின் பொன்மொழியல்லவா!