65
திரட்டிக் கொண்டு வந்து கி. மு. 410ம் ஆண்டு ஏதென்ஸ் மீது படையெடுத்தான். அந்தப் போரில் டோரியஸ் தோற்ருன். கைதியானன். மீண்டும் நீதி மன்றம் அவனை விசாரித்தது. இப்பொழுது மரண தண்டனை விதித்தது.
டோரியஸ் ஒலிம்பிக்பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபெற்று, வெற்றியடைந்து. ஏதென்ஸ் நாட்டுக்குப் புகழ் தேடித்தந்தான் என்ற ஒரே காரணத் திற்காக, அவன் மரணதண்டனையை ரத்து செய்தார் கள். மரணத்தின் கோரப்பிடிபிலிருந்து விடுதலையடைந் தான் டோரியஸ்.
இதற்கிடையில் ஏதென்ஸ்-க்கும் ஸ்பார்ட்டா வுக்கும் நடைபெற்ற போரில், ஸ்பார்ட்டா வெற்றி பெற்றது, ஸ்பாட்டாவின் கீழ் ஏதென்ஸ் வந்து விட்டது. எந்தச் சண்டையிலும் கலந்துகொள்ளாமல் டோரியஸ் இருந்தபோது, ஸ்பார்ட்டா அரசால் கைது செய்யப்பட்டான். குற்றவாளி என தீர்மானிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளானன்.
மனிதாபிமானம் நிறைந்த விதியானது, அவனது மரண தண்டனையை மாற்றி வைத்தது. ஆனல் டோரி யசின் தலைவிதி, அவனை வாழவிடவில்லை.மரணதண்டனை யாலேயே உயிரை இழந்தான். ஆற்றங்கரையின் மரமும், அரசனறிய வாழ்கின்ற மக்கள் வாழ்வும் எப்பொழுதும் ஆபத்துக்குள்ளாகும் என்பது பழந் தமிழ் பாட்டன்ருே ஆற்றங்கரையில் இருக்கின்ற மரம் அடி பெயர்ந்து விழுந்ததுபோல, அரசுக்குத் தெரிந்த புகழ்பெற்று வாழ்ந்த டோரியஸ், விதியால் வீழ்ந்தான் என்ருலும் வரலாறு அவனை மறக்காமல் வாழவைத்திருக்கிறது.