11. அதிகாரிகளிடத்திலே அதிகாரம்
இது வரை ஒன்பது கிரேக்க நாட்டுப் புகழ்மிக்க வீரர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். புகழேணியில் அவர்களை ஏற்றி வைத்த ஒலிம்பிக் பந்தயங்கள் எல்லாம். இசைவிழா நாடகவிழா போல, மக்கள் மாமன்றம் கூடி நடத்தும் மதத்தின் பெயரால் அமைந்த திருவிழா போலவே நடத்தப்பட்டிருக்கின்றன.
மத விழாக்களைப் போலவே, கோயிலும் ஆராதனையும் கொண்டாட்டமும் ஆக, பந்தயங்கள் கோலாகல மாக அந்தந்த மாநிலத்தில் நடத்தப்பட்டன.
விளையாட்டுக்களை நடத்துகின்ற அதிகாரிகளாக ஹலேநாடிகை (Hellanodikai) எனும் குழு மற்ற மாநிலங்களில் பணியாற்றும் நீதிபதிகளைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டது, போட்டியாளர்கள் பயங்கர விதிகளுக்கு உட்பட்டு, பங்கு பெற்றது போலவே அதி காரிகளும்பயந்துகொண்டுதான்தாங்களதுமுடிவைக்கூறவேண்டியவர்ளாக இருந்தார்கள். சில சமயங் களில் அபராதம் கட்டுகின்ற நிலைமைக்கும் ஆளானர் கள் என்ருல் பாருங்களேன்.
கி. மு, 396 ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. போலிமாஸ் லியான் என்று இரண்டு ஒட்டக்காரர்களி