பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



67


டையே ஏற்பட்ட முடிவின் பேதத்தால், முடிவு செய்த அதிகாரிகள் மாட்டிக் கொண்டார்கள்.

போலிமாஸ் என்பவன் தான்முதலில் வந்தான், வென் முன் என்று மூவரில் இருவர் தீர்ப்பளித்தனர். ஒருவரோ லியான் தான் வென்ருன் என்றுகூறினர். இதை அறிந்த லியான், அங்கிருந்த ஒலிம்பிக் கவுன்சிலிடம் சென்று. முறைகேடு நடந்துவிட்டது, நீங்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று முறையிட்டுக்கொண்டான்.

கவுன்சிலின் நிர்வாகக் குழு கலந்தாலோசித்து, அதிகாரிகள் தோற்றவனுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில் முதலில் வந்தவன் என்று தீர்மானிக்கப்பட்ட முடிவு மாற்றப் படவில்லை. அதிகாரிகள் நஷ்ட ஈடு கட்டுகின்ற நிலைமையில் நிறுத்தப்பட்டதால், நிம்மதியில்லாமலே அந்த நீதிபதி வேலையை செய்து கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகின்றது.

போட்டிகள் எல்லாம் முடிந்தவரை விடியற்காலையி லேயே நடத்தினர்கள். காரணம் என்னவென்ருல், சூரிய வெப்பம் தாக்காத குளுமை வேளை நன்ருக ஒடத் தாண்ட என்ற அளவில், அதிக சுறுசுறுப்பை உண்டாக்கும் என்பதால் தான்.

ஒரு பந்தயம் நடந்து மறுபந்தயம் நடக்கின்றஇடைவெளிக்குள், பந்தயத்திடல் முழுவதும் புல் புதராக மண்டி விடும். இந்தப்புல் அகற்றிப் பிடுங்கும் பணியை, போட்டியில் பங்கு பெறும் உடலாளர்கள்தான் செய்திருக்கின்ருர்கள். அவர்கள் புல் பிடுங்கி, தரையை செதுக்கி வேலை செய்வதைப் பார்த்து'