இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68.
வேறு அடிமைகள் இல்லையா இதனைச் செய்ய, என்று மற்றவர்கள் கேட்கின்ற நிலையில், போட்டியிடுபவர்கள் பொறுமையாகவேலை செய்திருக்கின் ருர்கள்.
விளையாட்டுப் போட்டிகளை எல்லாம், பெரும் பணக்காரர்கள் மனமுவந்து அளித்த பெருங்கொடை யினுல்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. போட்டி யாளர்கள் தங்கள் மேனியில் தேய்த்துக் கொள்ள ஆலிவ் எண்ணெய் தருவதிலிருந்து மற்றும் அத்யாவசி யமான பொருட்களை அளிப்பதுவரை பணக்காரர்கள் கொடையே பரிணமிக்கச் செய்திருக்கின்றன. செல் வந்தர்களின் செம்மாந்த வள்ளல் தன்மைதான், நாட்டின் சிறப்பையே வானளாவ உயர்த்தியிருக் கின்றன.