பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


மகிழ்ச்சியில் தாங்கள் மகிழ்ந்துபோகவும் கூடிய சூழ்நிலை அமைந்ததால், 'பிறந்த மேனி விதியை’ பெரிதும் ஆதரித்தனர் என்றும் ஒரு கருத்து கூறப் பட்டிருக்கிறது.

அதற்கு சான்றாக ஒரு கருத்தைக் கூறுகின்ருர்கள். கிரேக்கர்கள் எப்பொழுதும் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது கூட திறந்த மேனியராக இருக்க விரும்பினர்கள் என்பதாகும்.

அவ்வளவு அடக்கு முறையைக் கையாண்ட கிரேக்கர் காலத்திலேயே, ஆண்களுக்குப் பெண்கள் சிறிதும் சளைத்தவர்கள் அல்லர் என்பதாக, ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்ருர்கள்.

பெண்களுக்காக நடந்த ஒட்டப்பந்தயத்தை ஹிப்போடோமியா எனும் அரசி, தன் திருமணமானது பிலாப்ஸ் என்பவனுடன் நடந்ததைக் கொண்டாடும் முகத்தான் ஆரம்பித்தாள் என்று ஒரு வரலாறு கூறு கின்றது.

பெண்களுக்கான ஒட்டப்பந்தயமும் நான்கு ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தப் பட்டது. அதுவும் ஹீரா எனும் பெண் தெய்வத்தை வணங்கி நடத்தப்பட்டது. ஆண்கள் நடத்திய பந்தயங்கள் சீயஸ் எனும் கடவுள் சிலை முன் னிலையில் நடத்தப்பட்டதுபோல.

16 பெண்கள் அடங்கிய குழு ஒன்று நெய்த அழகிய (மேலாடை) அங்கி (Robe) ஒன்றை ஹீரா தெய்வச்சிலைக்கு அணிவித்து, விளையாட்டு விழாவைக் கொண்டாடினர்கள். திருமணம் ஆகாத கன்னியர் களே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவிழ்ந்த முடி, இடுப்பிலிருந்து முழங் கால் வரை தொங்குகின்ற கவுன் (Tunic, இடுப்புக்கு