பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உலவுகின்றன. அவ்வாறு நாடுகள் எல்லாம் அழிந்து போனதற்குரிய காரணம் என்ன வென்ருல்-அது மிகவும் சாதாரண காரணம்தான். அவர்களும், அந்த நாடும் அழியக் காரணம் மக்கள் தங்கள் உடல் திறனை (Physical Fitness) இழந்ததினுல்தான் வீழ்ந்தார்கள் என்பதே

வீறுபெற்று விளங்கிய வீரர்களை உருவாக்கிய கிரேக்கம் வீழ்ந்தது. மக்கள் தங்கள் உடல் திறனின் சக்தியை உணர்ந்து கொள்ளாமல் இருந்ததால் தான், என்ற உண்மையை அறியும்போது, ஒரு நாடு உயர வேண்டுமானல், உடல்திறன் நிறைந்த மக்களையே வளர்க்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிற தல்லவா!

"உடல் திறனை வளர்ப்போம். உயர்ந்த வாழ்வு வாழ்வோம். வீர பரம்பரையைத் தோற்றுவிப்போம். வேண்டிய எல்லாம் வேண்டியாங்கு பெறுவோம்’ என்ற இலட்சியத்தை நாம் அடைய இன்றே முயல் வோம்.

நலமுடன் வாழும் நாளே நளிைசிறந்த நன்ள்ை என்போம். இவ்வீரக்கதைகள் கூறும் விளக்கம் இதுவே. வாருங்கள் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து செல்லும் உயர்வாழ்வு வாழ்வோம்.