பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107 ஒட்டம் குறைய ஆட்டம் ஏற்படுகிறது

இவ்வாறு இரத்த ஓட்டம் உடலின் உறுப்புக்களுக்குக் கடைசி வரை போய்ச் சேராததால், அதன் விளைவாக பல நோய்கள் உடலில் முளைக்கின்றன.

இரத்த ஓட்டம் குறையக் குறைய, உயிர்க்காற்று. குறையக் குறைய ஜீரணம் கெடுகிறது. பற்கள்.பலத்தை இழக்கின்றன. கண்களுக்குக் கடைசிவரை இரத்த ஒட்டம் இல்லாததால்தான் கண்படலம் விழவும் ஏதுவாகிறது.

பித்தநீர் சுரப்பி, மண்ணிரல், கல்லீரல், கணையம் எல்லாமே பலவீனமடைகின்றன. ஒரு சில முக்கியமான இடங்களில் தசைநார்கள் தங்களது நீண்டு சுருங்கும் தன்மையை இழந்து விடுகின்றன.

எலும்புகளுக்குக் கால்சியச் சத்துத் தேவைப்படுகிறது. அந்தச் சத்துக் குறைவதால், எலும்புகளுக்குக் கனமும் அளவும் குறைகின்றது. அதனால் அவை எடை இழப்பதுடன், எளிதில் உடையவும், நொறுங்கவும் கூடியத் தன்மைகளைப் பெறுகின்றன.

உடலின் (மெட்டபாலிசம்) உள் செயல்முறை. சாதன அமைப்பு மெதுவாகக் குறைவதால், உடல் வெப்பத்தை உண்டாக்கும், சக்தியைக் குறைக்கிறது. அதல்ைதான் முதுமையுற்றவர்களால் குளிரை அதிகம் தாங்க முடியாமல் போகிறது.

முதுமையின் கொடுமை

இவ்வாறு உறுப்புக்கள் உழைப்பிலும், உணர்விலும், குன்றக் குன்ற, அது மூளையையும் பாதிக்கத்