பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 தொடங்குகிறது. மூளைக்கு உள்ளே உள்ள இடைவெளி யில் நீர் மிகுதி ஆக ஆக, எடை இழக்கத் தொடங்கு வதுடன், மூளையின் ஆற்றல் மறையத் தொடங்கு கிறது. அதன் கரரணமாக ஞாபக மறதி, மூடத்தனம், குழந்தைகள் செய்வன போன்ற நடவடிக்கைகள் எல்லாமே வந்து விடுகின்றன. அதனுல்தான் முதுமை யில் உள்ளவர்களை இரண்டாவது குழந்தைத்தனம்’ என்று நிலைமையிலே எண்ணிக் கொள்கிருேம்.

கைகால்கள் விறைப்பாகி விடுகின்றன. காலடி கடையின் இடைவெளி குறைகிறது. உடல் சுறு சுறுப்பை இழக்கிறது. அமைதியாக இருந்தாலும் அயர்வு நிறைகிறது. உணர்ச்சியற்ற தன்மை, குழப்பம், எதிர்மாருன கருத்துக்கள் எல்லாமே தோன்றுகின்றன.

மேலே கூறிய கருத்துக்கள் எல்லாமே முதுமை யுற்ற மனிதன் சக்திக்கவேண்டிய மாற்றங்களாகும். முதுமை நிச்சயம் நமக்கு வரும். யாராலும் மாற்ற முடியாது. ஏன் வயதாகிறது? முதுமை வருகிறது? எத்தனை வயதில் முதுமை வரும் என்பது யாருக்கும் புரியவில்லை. அது வளர்ச்சியின் வெள்ளோட்டமாகும். துள்ளாட்டமாகும்.

முதுமை வரக் காரணமென்ன?

முதுமையின் காரணம் பற்றி ஆராய்ந்த அறிஞர் கள் பலர், பலவிதமாகக் கூறுகின்ருர்கள். தேகத்தின் சக்தியிழப்பே காரணம் என்பார் ஒருசிலர். நோய்கள், கச்சுத் தன்மை நிறைந்த பழக்க வழக்கங்களால்தான் என்பார் இன்னும் சிலர். உள்ளுடல், தன் அமைப்பால் இயக்கம் தளர்வதால்தான் என்றும் கூறுவர் சிலர்

.