பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121 நல்ல குடிமக்களாக நலம் பேணுவதில் செல்வ வளமிக்கவர்களாக மக்கள் வாழவேண்டும் என்று பாரதி நினைந்து, பாடிக் குவித்த பல்லாயிரம் பாட்டுக்களிலே ஒரு வரியைப் படியுங்கள். குழந்தைகளுக்குப் புத்திமதி கூறவேண்டும் என்று நினைத்தவுடன், அவரது கினை வில் ஓடிவந்து விழுந்த ஓர் அடி 'ஒடி விளையாடு பாப்பா' என்பதுதான்.

பசித்தால் உண்ணுவதும், களைத்தால் உறங்குவ தும் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் குழந்தைகள் வியாடுகின்றனர். விளையாடி மகிழ்கின்றனர், விளை யாடியே தீர்க்கின்றனர். இதனை உன்னிப்பாகக் கவனித்த ஒரு மேல் காட்டறிஞர் கூறுகின்ருர் ஒரு குழந்தை விளையாடாமல் கிடக்கிறது என்ருல் ஒன்று, அது நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும். அல்லது அது இறந்திருக்க வேண்டும் என்று.

குழந்தைகளும் விளையாட்டும் அவ்வளவு திட்டவட்டமாக, தீர்க்கதரிசனமாக ஏன் அவர் கூறினர் என்ருல், விளையாட்டு என்பது குழந்தையின் உடலிலே ஒடுகின்ற உணர்வின் பிரதி பலிப்பு. ஊறிச் சுரக்கின்ற சக்திகளின் ஒருமித்த நீரோட்டம். உள்ளத்திற்கும், உடலுக்கும் உவகையூட்டு கின்ற ஓர் ஒப்பற்ற காந்த சக்தி.

பிறந்த உடனேயே கைகளையும், கால்களையும் அசைத்து இயக்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் செய்வன, இயற்கையான அசைவுதான் என்ருலும், அவ்வாறு இயக்குவதுதான் குழந்தைகள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.