பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
131

இவைகளையும் மீறி எதிர்பாராதது எல்லாம். கடக்கின்றன என்ருல் யாரைத்தான் நோக முடியும்.

விதியையும் மீறி சதி

பந்தயங்களில் வெற்றி பெறுபவருக்கு என்ன

பரிசு கிடைத்தது என்று எண்ணுகின்றீர்கள்? தெய்வக் கோயிலின் அருகே வளர்ந்த ஆலிவ் மரங்களில் விளைந்த, இலை, தழை, கொடிகளால் வளைத்துப் பின்னப் பட்ட புனித ஆலிவ் மலர் வளையம்'தான் கிரீடமாக சூட்டப் பெறும்.

இதற்கா இத்தனைப் போட்டி என்று நீங்கள் கேட்கலாம்! அதற்குப் பிறகு அந்த வெற்றி வீரனின் வாழ்வு புகழ் மிகுந்ததாக அல்லவா இருக்கும் ஒரு குட்டி தேவதையை வணங்குவது போல, அவன் வாழும் நகரமே அவனைப் போற்றும்; புகழும்; வணங்கும், வாழ்த்தும்; சிலை சமைககும், பா புனையும்; பரிசுகள் குவிக்கும்.

ஆகவே வெற்றிக்குப் பின்னே வருகின்ற பணம், பரிசு, புகழ், பெருமை, பதவி அனைத்திற்கும் ஆசைப் படுகின்ற உள்ளம் இல்லாமலா போகும்?

நல்ல உடல் இருந்தால் நல்ல மனம் வரும் என்பது தான் கிரேக்கர்களின் தலையாய கம்பிக்கை. அதன் பயனுகப் பிறந்ததுதான் ஒலிம்பிக் பந்தயங்களும்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னே தோன்றியது என்று ஆராய்ச்சி யாளர்கள் ஒலிம்பிக் பந்தயங்களின் பிறப்பினைக் கணிக்கின்றனர்.