பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
133.


அவர்களிடமிருந்து அபராதத் தொகை வதுலித்து, அவர்களால் முடியாவிட்டால், அவர்கள் எந்த நகரத்தின் பிரதிநிதிகளாய் வந்தார்களோ, அந்த ககரத்திலிருந்து வசூலித்து, பந்தயத் தலைவாசல்களிலே சிலையாக செய்து நிறுத்தி, மற்ற வீரர்களையும் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு 1300 ஆண்டுகள் கடந்த போட்டிகளில் 13 பேர்கள் பிடிபட்டு, ஊழல் செய்த காரணத்திற்காக, சிலை வடிவானுர்கள் என்று வரலாறு எடுத்துரைத் கின்றது.

ஊழல் என்ற தாய்க்குப் பிறந்த லஞ்சம்தான் உலகத்தையே ஆள்கிறது என்ருலும், அந்த ஊழலின் விளைவே அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்கும் இட்டுச் செல்கின்றது.

நாட்டிலே வாழும் சாதாரண ஒரு குடிமகன் லஞ்சம் கொடுத்தான் என்ருல், நாடாளும் சக்ரவர்த்தி அதற்கு மேல் செய்தால்தானே மதிப்பு: இந்தப் பெருமையை அடைந்தவன் நீரோ என்பவனுவான். ரோம் ககரம் பற்றி எரியும் பொழுது பிடில் வாசித்தானும் நீரோ என்கி ருேமே, அந்த நீரோதான்.

நீரோ நடத்திய தர்பார்

அவனது ஆட்சிக் காலத்தில் கிரேக்கம் ரோம் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆகவே ஒலிம்பிக் பந்தயங்களிலும் எல்லோரும் பங்குபெறலாம் என்ற விதியும் மாறி வந்தது. நீரோவுக்கும் ஒரு ஆசை வந்தது. தானே பெரிய வெற்றி வீரகை வர வேண்டுமென்று தான.