பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
136

அறிவுடையோர்கள் அதனை மனமார ஏற்றுக் கொண்டு, தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, புகழ் நிலையில் மேலோங்கி, வாழ்வின் பயனை அனுபவித்து மகிழ்கிறார்கள்.

புகழோடு வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம், விளையாட்டு உலகம் புகழைத் தருகிறது. மகிழ்வைத் தருகிறது.

விளையாட்டு உலகம் நோக்கி வாருங்கள் என்று எல்லோரையும் அழைக்கிறோம். நல்வாழ்வு பெற வாழ்த்துகிறோம்!