பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37


முடியும். வெற்றி தோல்வியைப் பற்றி வேதனைப் படாதவனே உண்மையான முயற்சியில் ஈடுபட முடியும் என்கின்ற விளையாட்டுத் தத்துவங்கள் எல்லாம், அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்துகின்ற தத்துவங்களே!

உடல் நலம், மனவளம், நம்பிக்கைப்பலம், முயற்சித் திறம், சலியாதுழைக்கும் குணம் எல்லாமே விளையாட்டில் வெற்றி தருதுை போலவே வாழ்க்கையிலும் வெற்றியைத் தரும்.

அந்த அரிய பண்புகளை விளையாட்டானது "தாயினும் சாலப் பரிந்து, மலரினும் மெல்லிய உணர்வு களால் நாளுக்கு நாள், நொடிக்கு நொடி அற்புதமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அவற்றின் நினைவு ஊன்றிய செயல் ஆக்கத்துடன் ஈடுபடுத்தி, அதிக மன உளைச்சலையும், சலிப்பையும் உண்டாக்காமல் மகிழ்ச்சியான சுற்றுப்புறத்திலே மனதுக்குள் ஏற்றி விடுகிறது. எ த னை யு ம் ஏற்றுக் கொள்கின்ற தன்மையிலே, எதிர்வரும் மனிதனை, மாற்றிவிடுகின்றது.

அந்த அனுபவங்களை அற்புதம் என்று ஏற்றுக் கொண்டு, செயலிலே புதுமைப்படுத்திக் கொள்கின்றவர்கள் அறிஞர்கள் ஆகிறார்கள். அவ்வளவு உச்ச நிலையை அடைய முடியாவிட்டாலும், அணுகாதவாறுவாழக்கற்றுக்கொள்கின்ற ஞானநிலை எய்தும் பேற்றினையாவது பெற்று வாழ்கின்றார்கள். இந்த ஞானகிலை விளையாட்டனுபவத்தால் மட்டுமே மிகுதியாகக் கிடைப்பதாகும். கீதையும் மேதையும்

கடமையைச் செய்பவன் மனிதன். அதற்குரிய பலனைத் தருபவன் இறைவன் என்று கீதையின்